

சித்தர்காடு சிவாலயத்தில் வீரபத்திரருக்கு அரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
பொதுவாக சிவாலயங்களில் வீரபத்திரரை காண முடியாது.
ஆனால் தமிழகத்தில் எந்த தலத்திலும் இல்லாத வகையில் இங்கு மட்டும் வீரபத்திரருக்கு முதன்மை இடம் கொடுத்துள்ளனர்.
இந்த ஆலயத்தை பாண்டிய மன்னான ஜடாவர்ம சுந்தரபாண்டியன் கட்டத் தொடங்கிய போது ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டன.
ஆனால் கட்ட முடியவில்லை. அப்போது வீரபத்திரருக்கு விரதம் இருந்து பூஜை செய்தால்தான் கோவில் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.
அதன்படி பாண்டிய மன்னன் விரதம் இருந்து கோவில் கட்டும் பணியை மேற்கொண்டார்.
அதனால்தான் வீரபத்திரருக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.