சிவபெருமானிடம் இருந்து தோன்றிய பிரத்தியங்கரா தேவி

சிவபெருமானிடம் இருந்து தோன்றியவள் பிரத்தியங்கிரா தேவி. ஆயிரம் சிங்க முகத்துடன், இரண்டாயிரம் கைகளுடனும் பிரத்தியங்கிரா தேவி தோன்றினாள்.
சிவபெருமானிடம் இருந்து தோன்றிய  பிரத்தியங்கரா தேவி
Published on

இரணியனை வதைக்க நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், இரணியனை கொன்றபின்பும் உக்கிரம் அடங்கவில்லை.

அவரது உக்கிரத்தால் மூவுலகும் அழிந்துவிடும் போல இருந்தது.

அப்போது தோன்றி, அவரது உக்கிரத்தை கிரகித்து சாந்தப்படுத்தி உலகத்தை அழிவில் இருந்து காத்தாள் பிரத்தியங்கிரா தேவி.

சிவபெருமானிடம் இருந்து தோன்றியவள் பிரத்தியங்கிரா தேவி.

ஆயிரம் சிங்க முகத்துடன், இரண்டாயிரம் கைகளுடனும் பிரத்தியங்கிரா தேவி தோன்றினாள்.

அவள் பார்வதியின் அம்சம். அவளே காளி, துர்க்கை.

பில்லி சூனியம், மந்திரம் தந்திரம், எந்திரம் ஏவல் எல்லாவற்றையும் முறியடித்து காக்கக்கூடியவள் பிரத்தியங்கிரா தேவி.

இவளையே அதர்வண வேதம் 'அதர்வண பத்ரகாளி' என்று கூறுகிறது. நோய்கள், பேய்களை ஓட்டக்கூடிய ஆற்றல் படைத்தவள்.

தன்னைத்தேடி வரும் பக்தர்களின் கவலைகளை போக்கி நலம், வளம் தருவதில் ஈடு இணையற்றவள் பிரத்தியங்கிரா தேவி.

X

Maalai Malar
www.maalaimalar.com