சிறுவாபுரி சென்று வந்தால் சொந்தவீடு நிச்சயம்!

கோவிலின் உயரமான கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொழுவாக வீற்று இருக்கிறது. இக்கோவிலின் தல விருட்சமாக மகிழம் மரம் திகழ்கிறது.
சிறுவாபுரி சென்று வந்தால் சொந்தவீடு நிச்சயம்!
Published on

இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி , ஆதிமூலவர் நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் அனைத்தும் பச்சைக்கற்களால் ஆனது என்பது தான் விசேஷம்.

கோவிலின் உயரமான கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொழுவாக வீற்று இருக்கிறது.

இக்கோவிலின் தல விருட்சமாக மகிழம் மரம் திகழ்கிறது.

இங்குள்ள முருகனை மனமுறுகி வேண்டினால் பூமி சம்பந்தமாக அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும் , குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும் கடன் தொல்லை நீங்கவும் சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.

தை மாதத்தில் கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்து விட்டு நம்பிக்கையுடன் சிறுவாபுரிக்கு 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தால் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இது மட்டும் அல்லாது கல்வி செல்வம் , செல்வ செழிப்பான வாழ்க்கை, கடன் பிரச்சினை தீருதல் என அனைத்து பிரார்த்தனைகளையும் இந்த முருகன் நிறைவேற்றி தருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com