சரஸ்வதி தேவிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை ஏன்?

தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம்.தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.
சரஸ்வதி தேவிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை ஏன்?
Published on

தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம்.

இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.

மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது.

ஒருவரது ஜாதகத் தில் குரு பலம் இல்லை யென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குருபார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி.

அந்த கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யம் செய்ய வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com