சனி பகவான் வந்து வழிபாடு செய்த பைரவர்

இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர்.ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோவிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
சனி பகவான் வந்து வழிபாடு செய்த பைரவர்
Published on

திருவான்மியூர்:

சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.

இலுப்பைக்குடி:

இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர்.

இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

அந்தியூர்:

ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோவிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

காஞ்சிபுரம்:

உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோவிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார்.

சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

திருவியலூர் (திருவிசநல்லூர்):

கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது.

இத்திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com