புத்திர பாக்கியம் அருளும் மகா பிரத்தியங்கிரா தேவி

பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும்
புத்திர பாக்கியம் அருளும் மகா பிரத்தியங்கிரா தேவி
Published on

-"ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிக்வே

கராள தம்ஷ்டரே பிரத்யங்ரே

க்ஷம் க்ரீம் கூம் ப்பட்"

என்ற பிரத்தியங்கிரா தேவியின் மூல மந்திரத்தை நாள்தோறும் சொல்லி வந்தால் வாழ்வில் பில்லி, சூனியம் உள்ளிட்ட பிணிகள் எதுவும் நம்மை அண்டாது.

அகங்காரமும், ஆணவமும் கொண்ட இரண்யகசிபுவை அழிக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார் பகவான் நாராயணன்.

கோர ரூபத்தில் வெளிப்பட்ட நரசிம்மர் இரண்யகசிபுவின் வயிற்றைக் கிழித்து, ரத்தத்தைக் குடித்து, அவனைக் கொன்று ஆணவத்தை அழித்தார்.

சம்ஹாரம் முடிந்த பின்பு நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க உருவாக்கப்பட்ட சரபேசுவரரின் இரு இறக்கைகளில் ஒன்றாக பிரத்தியங்கிரா தேவி பத்திரகாளியால் உருவாக்கப்பட்டாள்.

பிரத்தியங்கிராதேவி சிங்கமுகத்துடன் ஆயிரம் திருமுகங்களும், இரண்டாயிரம் கைகளும் சிவப்பேறிய கண்கள் மூன்றும், கனத்த சரீரமும், கரிய நிறமும், நீலநிற ஆடையும் அணிந்த விஸ்வரூபத்தினை உடையவள்.

கருணை உள்ளம் கொண்ட அன்னையான மகா பிரத்தியங்கிராதேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை அருள் மழையாய் பொழிந்து காத்து வருபவள் ஆவாள்.

பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com