பிரத்தியங்கிரா தேவியின் உபாசனை அவசியம்

மகாசக்தி அன்னை பார்வதியை வழிபாடு செய்யாமல் பிரத்தியங்கிராவைத் தனியே வழிபடக்கூடாது. மகாசக்தியை வழிபாடு செய்தாலே பிரத்தியங்கிரா தேவி நமக்குத் தெரியாமலே நம்மைக் காக்கிறார்.
பிரத்தியங்கிரா தேவியின் உபாசனை அவசியம்
Published on

மகாசக்தி அன்னை பார்வதியை வழிபாடு செய்யாமல் பிரத்தியங்கிராவைத் தனியே வழிபடக்கூடாது.

மகாசக்தியை வழிபாடு செய்தாலே பிரத்தியங்கிரா தேவி நமக்குத் தெரியாமலே நம்மைக் காக்கிறார்.

காப்புக் கடவுளாக விளங்குகிறாள் பிரத்தியங்கிரா தேவி.

வன்முறையும் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்துள்ள நிலையில், துஷ்டர்களும், எதிரிகளும் சூழ்ந்து வளர்ந்து வரும் நிலையில், கூட இருந்தே குழிபறிக்கும் பகைவர்களும் கெட்ட எண்ணம் கொண்டோரும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்குப் பாதுகாப்புத் தருபவள் பிரத்தியங்கிரா தேவி.

பயத்தை அகற்றுபவள், தைரியத்தை கொடுப்பவள், தெரிந்தும் தெரியாமலும் வரும் பகையை முறியடிப்பவள் பிரத்தியங்கிரா தேவி, சத்ருவிடம் ஜெயம் சேர்ப்பாள்.

இவளை உபாசிக்க நமக்கு மன உறுதி, தனித்தகுதி அவசியம். நல்லெண்ணம், நற்செய்கைகள், தேவியின் மீது உயர்ந்த பக்தி, இருப்பின் எண்ணம் யாவும், வெற்றி உண்டாகும். லட்சியம் நிறைவேறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com