பித்ரு வழிபாடு

பின்னர் புத்தாடை அணிய வேண்டும். புத்தாடை என்றால் புதிய ஆடை என்று அர்த்தம் அல்ல. வீட்டில் இருந்து கொண்டு வரும் ஏதாவது ஒரு தூய்மையான ஆடையை அணிய வேண்டும்.
பித்ரு வழிபாடு
Published on

ஞாயிறு திருத்தலம் கண்நோய் தீர்ப்பதோடு பித்ருக்கள் வழிபாட்டுக்கும் மிக மிக உகந்த தலமாக திகழ்கிறது.

சிலருக்கு பித்ருக்கள் தோஷம் இருந்து கொண்டேஇருக்கும். சிலர் தங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை அறியாமல் இருப்பார்கள்.

மேலும் சிலர் பித்ருக்கள் தோஷம் இருப்பதை அறிந்தும் அதற்கு உரிய பரிகாரத்தை செய்யாமல் இருப்பார்கள்.

அத்தகைய நிலையில் இருப்பவர்கள் இந்த தலத்துக்கு ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்து முறையான வழிபாடு செய்ய வேண்டும்.

முதலில் அவர்கள் அங்குள்ள சூரிய தீர்த்தத்தில் இறங்கி குளிக்க வேண்டும்.

பிறகு நனைந்த உடைகளை அங்கேயே குளத்துக்குள் விட்டு விடவேண்டும்.

பின்னர் புத்தாடை அணிய வேண்டும். புத்தாடை என்றால் புதிய ஆடை என்று அர்த்தம் அல்ல.

வீட்டில் இருந்து கொண்டு வரும் ஏதாவது ஒரு தூய்மையான ஆடையை அணிய வேண்டும்.

பிறகு ஆலயத்துக்குள் வந்து சூரிய பகவானுக்கும், சிவபெருமானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

பித்ரு தோஷம் காரணமாக என்ன பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்று அர்ச்சகரிடம் கூறினால் அவர் அதற்கேற்ப வழிபாடுகளை செய்ய உதவுவார்.

இதன் மூலம் பித்ரு தோஷங்களை மிக எளிதாக தீர்க்கலாம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com