ஓம் எனும் பிரணவப் பொருள்

தந்தைக்கு “ஓம்” என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு. ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.
ஓம் எனும் பிரணவப் பொருள்
Published on

தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

அ- படைத்தல் உ- காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள்.

முருகனுக்குப் படை வீடு ஆறு. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com