நவக்கிரகங்கள்-சூரியன்!

ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.
நவக்கிரகங்கள்-சூரியன்!
Published on

நவக்கிரகங்கள் - சூரியன்

ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.

ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு,

பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்குக் கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.

பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், சாரதரிடம் மன்னிப்புக் கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்குச் சூரிய புராணத்தை உரைத்தார்.

அதனைக் கேட்டு அவன் நோய் நீங்கியதாகப் புராணம் கூறும்.

வடநாட்டில் "முல்தானத்தில்" உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பெற்றது என்பர்.

தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் "திருக்கண்டியூர்" மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகில் உள்ள"பனையபுரம்" ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.

உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி, அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள "ஆதித்யபுரம், கும்பகோணம் கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் "சூரியமூலை" ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் சூரியனை வழிபட ஏற்ற தலங்கலாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com