நதியை தாயாக வழிபடும் ஆடிப்பெருக்கு!

நதியைப் பெண்ணாக கருதி வணங்கும் திருநாள் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது. நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.
நதியை தாயாக வழிபடும் ஆடிப்பெருக்கு!
Published on

நதியைப் பெண்ணாக கருதி வணங்கும் திருநாள் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடி மாதம் தொடங்கியதும் மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருகியோடும்.

இதில் ஆடி மாதத்தின், 18-ம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது.

அன்று பெண்கள் தம் குடும்த்தார் மற்றும் உறவினர்களுடன் புத்தாடை அணிந்து,

சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று,

நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

இந்த தினத்தில் பெண்களால் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com