மரகதபச்சையில் வைரம் போல் பிரகாச ஜோதியாக காட்சியளிக்கும் அண்ணாமலையார்

அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகாச ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.
மரகதபச்சையில் வைரம் போல் பிரகாச ஜோதியாக காட்சியளிக்கும் அண்ணாமலையார்
Published on

சிறுவாபுரியில் முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகாச ஜோதியாகக் காட்சி அளிக்கிறார்.

இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.

அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு 'மயிலுமாடி நீயுமாடி வரவேணும்' என்று பாடியதற்கு இணையாக, இங்கு 'மைந்துமயில் உடன் ஆடிவர வேணும்' என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள்.

அருணாசலேசுவரர், அபிதகுஜலாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளி நங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை கைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com