மலேசியா சிங்கப்பூரிலிருந்து வந்து யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள்

ஆடி மாதத்தில் மகப்பேறு, குழந்தை செல்வம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் செய்யப்படுகிறது.நீண்ட ஆயுள் விருத்திக்கு மிருத்யுஞ்ஜெய யாகம், நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்க மகா சுதர்சன யாகம் செய்யப்படுகிறது.
மலேசியா சிங்கப்பூரிலிருந்து வந்து யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள்
Published on

 ஆடி மாதத்தில் மகப்பேறு, குழந்தை செல்வம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம், நீண்ட ஆயுள் விருத்திக்கு மிருத்யுஞ்ஜெய யாகம், நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்க மகா சுதர்சன யாகம், கல்வி, கலைத்துறை வளர்ச்சி அடைய ராஜமாதங்கி யாகம், பகையை வெல்ல மகாவராகி யாகம், செழிப்பான வாழ்வு பெற வனதுர்கா யாகம், அன்புடன் உலக மக்கள் ஆனந்தமாய் வாழ ஸ்ரீ சதசண்டீமகா யாகம் நடைபெறுகிறது.

யாகங்களில் கலந்து கொண்டு அதன் மூலம் நமக்கு தெய்வ பலன், ஆசி கிடைப்பதாக பல புராணங்களில் கூறி உள்ளதால் மேற்கண்ட யாகங்களில் கலந்து கொள்ள ஸ்ரீமகாபஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

இங்கு 24 மணி நேர அன்னதான ஏற்பாடுகளை ஸ்ரீமகாபஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி தர்மஷேத்ரா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com