மகத்துவம் நிறைந்த துளசி மாலை

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.துளசியை நினைத்தால் பாவம் போகும்.
மகத்துவம்  நிறைந்த  துளசி மாலை
Published on

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தை பெற முயன்றனர்.

அப்போது பாற்கடலில் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் தோன்றினர்.

மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது.

அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார்.

துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் வசிக்கின்றனர்.

இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர்.

துளசியை நினைத்தால் பாவம் போகும்.

துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும்.

புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம்.

இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com