குழந்தை பாக்கியம் கிட்ட தாமதமாகிறதா?

நெய் தீபம் தொடர்ந்து முப்பது தினங்கள் ஏற்றி வர முன்னேற்றம் காணும்.ஏழு செவ்வாய் அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகளில் சிகப்பு மலரால் அர்ச்சித்து வர காரியம் கைகூடும்.
குழந்தை பாக்கியம் கிட்ட தாமதமாகிறதா?
Published on

தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி செல்வரளி கொண்டு அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு ஆடை தானம் செய்ய பலன் கிட்டும்.

உத்தியோக உயர்வு, வியாபார உயர்வு கிடைக்க வேண்டுமா?

வளர்பிறை அஷ்டமி தினத்தில் சுவர்ண ஆகார்ஷன மந்திரமும் தியான மந்திரமும் சொல்லி 108 காசுகளால் அர்ச்சித்த பின்னர் அந்த காசுகளை பணப்பெட்டியில் அல்லது அலுவலக அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நெய் தீபம் தொடர்ந்து முப்பது தினங்கள் ஏற்றி வர முன்னேற்றம் காணும்.

இழந்துவிடும் நிலையில் உள்ள சொத்து மீண்டும் வரவேண்டுமா?

மிளகு சிறிதளவு எடுத்து மூட்டையாக வெள்ளைத் துணியில் கட்டி நல்லெண்ணை தீபம் ஏற்றி துரோகம் செய்பவரை எண்ணி பொருள்கிட்ட வேண்டிக் கொள்வதுடன் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

ஏழு செவ்வாய் அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகளில் சிகப்பு மலரால் அர்ச்சித்து வர காரியம் கைகூடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com