குழந்தை பாக்கியம் தரும் கால பைரவர்

அப்படி குழந்தை செல்வத்தை அடைந்தவர்கள் வைத்து விட்டுப்போன கல்நாய்க் குட்டி பொம்மைகள் நூற்றுக் கணக்கில் ஆலயத்தில் இருப்பதை இப்போதும் காணலாம்.
குழந்தை பாக்கியம் தரும் கால பைரவர்
Published on

குழந்தை செல்வம் வேண்டும் தம்பதியர் இங்கு வந்து நந்தி தீர்த்ததில் நீராடி காளிகாதேவி சமேத ஸ்ரீகால பைரவரை தரிசித்து அங்கிருக்கும் கல்நாய்குட்டியை எடுத்துக்கொண்டு நாய் வாகனத்தை மும்முறை வலம் வந்து நாய்குட்டி பொம்மையைக் கீழே வைத்து விட்டு குழந்தை செல்வம் அருள ஸ்ரீகால பைரவ மூர்த்தியிடம் பிரார்த்தித்துக்கொண்டு வணங்கிச்செல்வார்கள்.

ஸ்ரீகால பைரவ சுவாமியின் பரிபூரண கருணாகடாட்சத்தினால் குழந்தை செல்வத்தைப் பெற்று, அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு புதிய ஒரு கல்நாய்க்குட்டி பொம்மையுடன் மீண்டும் ஆலயத்திற்கு வந்து நாய்க்குட்டி பொம்மையை நாய் வாகனத்திடம் வைத்துவிட்டு நிறைவான மனதுடன் தங்கள் இல்லம் திரும்புவார்கள்.

அப்படி குழந்தை செல்வத்தை அடைந்தவர்கள் வைத்து விட்டுப்போன கல்நாய்க் குட்டி பொம்மைகள் நூற்றுக் கணக்கில் ஆலயத்தில் இருப்பதை இப்போதும் காணலாம்.

குழந்தை செல்வம் வேண்டி பிரார்த்தனை செய்ய விரும்பும் தம்பதியர் ஆலய அர்ச்சகரை அணுகினால், அவர் பூஜாக்கிரமங்களை விரிவாக எடுத்துரைப்பதுடன் பூஜையையும் நடத்தி வைப்பார்.

பக்தி சிரத்தையுடன் நம்பிக்கையும் கொண்டு ஸ்ரீ காளிகா தேவி சமேத ஸ்ரீ கால பைரவ சுவாமியை வழிபடும் தம்பதியர் குழந்தைச் செல்வம் பெறுவது உறுதி என்று அறுதியிட்டுச் சொல்கிறார்கள் பலன் அடைந்த தம்பதியர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com