

கொல்லூர் கோவிலின் சுற்றுப் பிரகாரத்தின் தரையும், மூலவர் சன்னதியின் சுற்றுச்சுவர் பிரகாரத்தின்
நான்கு பகுதி மண்டபங்கள், தூண்கள், மேற்கூரை அனைத்தும் கருங்கல்லால் ஆனது.
1150 ஆண்டுகளுக்கு முன்னால் சாலிவாகன சகாப்தத்தில் கட்டப்பட்டது.
இதன் கோபுரம், உள் அமைப்பு, கருவறை இவைகள்கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது.
இதை கட்டியவர்கள் பெங்கி என்ற வம்சம் சார்ந்த சங்கண்ண சாமந்தரின் மருமகன் பேங்கண்ணா சாமந்தர் என்ற குறுநில மன்னன்.
கேரளத்தை ஆட்சிபுரிந்த பல்வேறு மன்னர்களும், திருவாங்கூர் கொச்சின், கோழிக்கோடு
சமஸ்தான மன்னர்களும், மூகாம்பிகா கோவிலுக்கு நிலமானியங்கள் தங்கம்,
வைரம் என காணிக்கையை சமர்பித்துள்ளார்கள்.
இந்திய விடுதலைக்கும் முன்பு கொச்சி சமஸ்தானத்திற்கு வடக்கே இருந்த பரவூர் என்ற
பகுதியின் ராஜா தம்புரானுக்கு மூகாம்பிகாவே குல தெய்வம்.
இவர் அடிக்கடி கொல்லூர் வந்து அம்பாளை தரிசித்து போவாராம்.
வயது முதிர்ந்த இவரால் வரமுடியாமல் போன போது, பரவூரிலேயே மூகாம்பிகாவுக்கு
கோவில் எழுப்பியதாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.
1. கேரளம் தந்த மாபெரும் ஓவியன் ராஜாரவிர்மா இங்கு சித்திரம் வரைந்துள்ளார்.
2. இசை மேதை செம்மங்குடி மற்றும் கதகளி பரத நாட்டிய கலைஞர்கள் என எண்ணற்ற கலைஞர்கள் இங்கே அரங்கேற்றம் செய்து உள்ளனர்.
3. பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் மூகாம்பிகை ஆலயத்துக்கு சென்று பலமுறை இசை விருந்து அளித்துள்ளார்.