கடன் பிரச்சினையை தீர்த்து வைத்து மகிழ்ச்சி வாழ்வு தரும் கரூர் மாரியம்மன்

மூன்று கிரகங்களின் தாக்கத்தை குறைத்து கடன் சுமையை தீர்ப்பதற்கு மாரியம்மன் வழிபாடு உகந்தது.
கரூர் மாரியம்மன்
கரூர் மாரியம்மன்
Published on

கடன்

நாகரீக வளர்ச்சிக்கேற்ப இன்றைய காலத்தில் நோயின் தாக்கம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அதேபோல் கடன், அயராத உழைப்பு, மன அழுத்தம் போன்ற தாக்கங்களும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவருக்காவது நோய் இருக்கும்.

அதே போல் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் என்ற நோயும் இருக்கத்தான் செய்கிறது.

கரூர் மாரியம்மன்

இந்த கடனை திருப்பிக் கொடுத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பலரும் முயற்சி செய்தாலும் ஒரு சிலரால் மட்டுமே அதை செய்ய முடிகிறது. அப்படி செய்ய முடியாமல் கஷ்டப்படுபவர்கள் கரூர் மாரியம்மனை வழிபட்டால் அவர்களின் கடன் சுமை தீரும் என்பது ஐதீகம்.

பொதுவாக ஒருவர் கடனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றால் அவருடைய ஜாதகத்தில் சனி மற்றும் கேதுவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அதே போல் ஒருவருக்கு கடன் சுமை குறைய வேண்டும் என்றால் செவ்வாயுடன் குரு சேர்ந்து இருந்து நன்மையை தந்தால் மட்டும் தான் அவரால் கடன் சுமையை அடைக்க முடியும்.

ஆக மொத்தம் ஒருவருக்கு அவருடைய வாழ்க்கையில் கடன் என்ற பிரச்சினை ஏற்பட்டு விட்டால் அவருடைய ஜாதகத்தில் செவ்வாய், சனி மற்றும் கேதுவின் தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும்.

வழிபாடு

இப்படி இந்த மூன்று கிரகங்களின் தாக்கத்தை குறைத்து கடன் சுமையை தீர்ப்பதற்கு மாரியம்மன் வழிபாடு உகந்தது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த மாரியம்மன் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்து நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய கடன் என்னும் கொடிய நோயிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம்.

சக்தியின் திருவுருவமாய் திகழும் கரூர் மாரியம்மனின் அருள் மழையில் தன்னை நாடிவரும் பக்தர்களை நனைய வைத்து நோயற்ற வாழ்வையும், கடன் சுமையற்ற நாட்களையும் அளிக்கிறாள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com