கருணா சாகரம் - ஸ்ரீ லலிதாம்பிகை

ஸ்ரீ லலிதாம்பிகை கருணா சாகரம்
கருணா சாகரம் - ஸ்ரீ லலிதாம்பிகை
Published on

வில்லெனும் புருவமும்

வேல் விழி கண்களும்

சொல்லெனும் அமுதமும்

சுடர்ஒளி பார்வையும்

அன்பெனும் ஞானமும்

அட்டமா சித்தியும்

தன்னுள்ளே கொண்ட

தாயவள் பொற்பாதம்பணிய

மின்னிடும் தேகம்

மிரன்டோடும் வினையாவும்

உன்னுள்ளே கண்களும்

உருகும் விழிநீர்கொண்டு

மெய்யுள்ளே அகந்தை

மெதுவாக சாகும் பாரீர்

பொய்யில்லை உண்மை

பொற்பாதம் பணிந்துபாரீர்

X

Maalai Malar
www.maalaimalar.com