காஞ்சிபுரம் கச்சபேசப்பெருமாள்

கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால் ‘விருச்சிக மாதம்‘ என்பர். காஞ்சீபுரத்தில் உள்ள ஜோதி லிங்கமான கச்சபேசப் பெருமானை வழிபடுவது, மிகுந்த பலன் தரும்.
காஞ்சிபுரம் கச்சபேசப்பெருமாள்
Published on

கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால் 'விருச்சிக மாதம்' என்பர்.

இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடாகும்.

சூரியனுக்கு இம்மாதத்தில் வழிபாடு செய்வதால் பரம்பரை சொத்துக்களால் பயன் உண்டாகும்.

அவை நம்மை விட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.

கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவது, ஜோதிர் லிங்கங்களை வழிபடுவது முதலானவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கின்றன.

காஞ்சீபுரத்தில் உள்ள ஜோதி லிங்கமான கச்சபேசப் பெருமானை வழிபடுவது, மிகுந்த பலன் தரும்.

கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் முழ்கி, அதன் கரையிலுள்ள

இஷ்டலிங்கப் பெருமானையும், கசபேசப் பெருமானையும் வழிபட்டால், நினைத்த காரியம் நல்லபடியே நடக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com