காலப்பெட்டகமான ஆலய அமைப்பு

அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது. நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.
காலப்பெட்டகமான ஆலய அமைப்பு
Published on

நடராஜர் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோவில்.

இது சோழ வம்சத்தின் அடையாளச்சின்னம். அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் நம் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரம்.

இது கோவில் மட்டுமல்ல, காலப்பெட்டகமும்கூட!. வெவ்வேறு காலகட்டத்தில் பல ராஜ வம்சங்களால் இந்த கோவிலில் புதுப்பிப்பு செய்யப்பட்டும், புதிய கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.

கோவில் வளாகம் பல்வேறு அடுக்கடுக்கான தொகுதிகளை கொண்டு அமைந்திருப்பது அற்புதமான கட்டிடக்கலை அம்சமாக கருதப்படுகிறது.

ராஜகோபுர வாயிலை தாண்டி கோவில் வளாகத்தில் நாம் கால் பதித்த உடனேயே பிரமிப்பு புராதன திராவிடக் கட்டிடக்கலையின் நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோவிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது.

அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.

நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.

இந்த பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோவில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் அமைந்துள்ளன.

மேலும் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதில் சுவரையட்டியே காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com