எத்தனை மலர்கள் அர்ச்சனை என்ன பயன்?

சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சிப்பவன் ராஜயோகம் அடைவான்.லட்சம் கருஊமத்தை அர்ச்சிப்பின் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
எத்தனை மலர்கள் அர்ச்சனை என்ன பயன்?
Published on

சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சிப்பவன் ராஜயோகம் அடைவான்.

ஐந்துகோடி மலர்களால் அர்ச்சித்தால் முக்தி பெறுவான்,

ஒரு கோடி மலர்களால் அர்ச்சித்தால் ஞானம் பெறுவான்.

அரைக்கோடி மலர்களால் அர்ச்சித்து மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஐந்து லட்சம் ஜபித்தால் சிவன் பிரத்யட்மாவான், லட்சம் அருகம்புல் அர்ச்சித்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்.

லட்சம் கருஊமத்தை அர்ச்சிப்பின் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

லட்சம் கரவீர புஷ்பத்தால் அர்ச்சிப்பின் சர்மராகங்கள் நிவர்த்தியாகும். லட்சம் மல்லிகை அர்ச்சிப்பின் அழகிய மனைவி கிடைப்பாள்.

ஐம்பதினாயிரம் மலர்களால் அர்ச்சித்தால் ரோகம் நிவர்த்தியாகும். பன்னீராயிரத்து ஐந்தூறு மலர்களால் அர்ச்சிப்பின் கல்வி, கேள்விகளில் சிறந்தவனாவான்.

பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க சத்ருபயம் நீங்கப் பெறுவான் என்று சிவபுராணம் கூறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com