தீபாவளி திருநாளில் நடந்த புராண நிகழ்வுகள்

பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் தோன்றியதும் அவளை, திருமால் மணந்து கொண்டதும் தீபாவளித் திருநாளில்தான். பகீரதன் தவம் செய்து கங்கையை வரவழைத்த திருநாளாக தீபாவளியைப் போற்றும் கதைகளும் உண்டு.
தீபாவளி திருநாளில் நடந்த புராண நிகழ்வுகள்
Published on

* வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலியை காலால் பூமியில் அழுத்திய நாள் தீபாவளி என்று சொல்கிறார்கள்.

* வனவாசம் முடிந்து ஸ்ரீராமபிரான் அயோத்தி திரும்பிய நாளை தீபாவளித் திருநாளாகச் சொல்வோரும் உண்டு.

* பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் தோன்றியதும் அவளை, திருமால் மணந்து கொண்டதும் தீபாவளித் திருநாளில்தான்.

* பகீரதன் தவம் செய்து கங்கையை வரவழைத்த திருநாளாக தீபாவளியைப் போற்றும் கதைகளும் உண்டு.

* சிவபெருமான், தன் மேனியின் இடபாகத்தை பார்வதி தேவிக்கு அளித்து, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த திருநாள் & தீபாவளி என்போரும் உண்டு.

* தமிழகத்தில் சோழர்களது காலம் வரை தீபாவளி கொண்டாடப்படவில்லை. மதுரை & திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தில் தீபாவளித் திருநாள் அறிமுகமானது.

* சிங்கப்பூரிலுள்ள மாரியம்மன் கோவிலில் தீபாவளியன்று பூக்குழித் திருவிழா நடைபெறும்.

* நரகாசுரனின் மகனான பகதத்தனே, தீபாவளியை முதன் முதலாகக் கொண்டாடியவன்.

* ஒரு தீபாவளித் திருநாளில்தான் ஆதிசங்கரர் ஞான பீடத்தை நிறுவினார்.

* பிரகலாதனின் பேரன் மகாபலி அரியணை ஏறியது இந்த நாளில்தான். சந்திரகுப்த விக்ரமாதித்தன் அரியணையில் அமர்ந்ததும் இந்தத் திருநாளில்தான்.

* சீக்கிய மதகுரு குருநானக், தீபாவளியன்றுதான் அமரரானார். ஆரிய சமாஜத்தின் நிறுவனர் தயானந்த சரஸ்வதி அமரர் ஆனதும் இந்த நாளில்தான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com