சென்னையில் உருவ ரூபமாக காட்சியளிக்கும் ரோமரிஷி

குறிப்பாக அந்த ஆலயத்தில் உள்ள வட்டபாறையில் ரோமரிஷியின் மந்திரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.அந்த மன்னன்தான், இந்த ரோமரிஷி ஆலயத்தையும் கட்டியதாகக் கருதப்படுகிறது.
சென்னையில் உருவ ரூபமாக காட்சியளிக்கும் ரோமரிஷி
Published on

சென்னையில் வசிப்பவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்வதன் மூலம் ரோமரிஷியின் அருளை பெற முடியும்.

குறிப்பாக அந்த ஆலயத்தில் உள்ள வட்டபாறையில் ரோமரிஷியின் மந்திரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அந்த பகுதியில் தியானித்தால் சிவபெருமான் அருளுடன் ரோமரிஷி தரும் பலன்களையும் பெறலாம்.

அதே திருவொற்றியூரில் தேரடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் பகுதியில் இருக்கும் மயிலாண்டவர் ஆலயத்தில் ரோமரிஷி உருவ ரூபமாக இருக்கிறார்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தை கட்டிய காஞ்சி மன்னன் தொண்டைமானுக்கு ரோமரிஷி முனிவர் காட்சி கொடுத்து அருள் பாலித்ததாக குறிப்புகள் உள்ளன.

அந்த மன்னன்தான், இந்த ரோமரிஷி ஆலயத்தையும் கட்டியதாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com