சந்திர பலம் பெற்றவர்கள் அடையும் நன்மைகள்

இப்பலம் பெற்றவருக்கு வாய்க்கும் மனைவியும் உயர்ந்த வேலையில் உள்ளவர்களாக இருப்பார்கள்.சந்திரன் நின்ற தானத்திற்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு சந்திரமங்கள யோகம் ஏற்படும்
சந்திர பலம் பெற்றவர்கள் அடையும் நன்மைகள்
Published on

சந்திர பலம் அதிகமாக உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பார்கள்.

இவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

இப்பலம் பெற்றவருக்கு வாய்க்கும் மனைவியும் உயர்ந்த வேலையில் உள்ளவர்களாக இருப்பார்கள்.

ஒருவன் பிறந்த நேரத்தில் சந்திரன் இருக்கும் ராசியே "ஜெனன ராசி" என்று ஜாதகத்தில் குறிப்பிடப்படுகிறது.

கடகத்தை ஆட்சியாக கொண்ட சந்திரனை ராணி என்றும் தாய்க்கிரகம் என்றும் சொல்வார்கள்.

சந்திர பலம் அதிகமாக உள்ளவர்கள் எழுத்தாளர்களாக, நடிகர்களாக, சொற்பொழிவாளர்களாகவும், கவிஞர்களாகவும், வியாபாரிகளாக இருப்பார்கள்.

அழகு நிலையம் வைத்து நடத்துவார்கள்.

அழகு பொருள், வாசனை பொருள் தயாரிப்பார்கள், துணிக்கடைகளுக்கு முதலாளியாக இருப்பார்கள்.

ஜாதகத்தில் நாலாம் இடத்தில் சந்திரன் இருந்து அது கடகம், மீனமாக இருந்தால் அவர்கள் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்வார்கள்.

சுக்ர பலமின்றி சந்திர பலமட்டும் உள்ளவர்கள் கடலில் வேலை செய்வார்கள்.

ஒருவருடைய ஜாதகத்தில் குருவுக்கு 1, 4, 7, 10 இல் சந்திரன் இருந்தால் அவருக்கு "கெஜகேசரி யோகம்" ஏற்பட்டு தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் ஏற்படும்.

சந்திரன் நின்ற தானத்திற்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு சந்திரமங்கள யோகம் ஏற்படும்.

இதனால் அவர்களுக்கு அரச போக வாழ்க்கை கிட்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com