சதுர்த்தி விரத பூஜையால் பலன் பெற்றவர்கள்

சீதையைத் தேடுவதற்காக அனுமார் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார்.
சதுர்த்தி விரத பூஜையால் பலன் பெற்றவர்கள்
Published on

பார்வதி தேவி, சிவபெருமான், அரிச்சந்திரன் ஆகியோர் சதுர்த்தி விரதம் இருந்து சங்கடம் நீங்கியுள்ளனர்.

சீதையைத் தேடுவதற்காக அனுமார் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார்.

பஞ்சபாண்டவர்கள் நாடிழந்து வனவாசம் சென்ற பொழுது இந்த விரதத்தை பகவான் விஷ்ணுவின் அறிவுரைப்படி

மேற்கொண்டு குருச்சேத்திரப் போரில் பகைவர்களை வென்றிருக்கின்றனர்.

கந்தக் கடவுளாம் முருகக் கடவுளே தவத்தில் சிறந்த முனிவர்களிடம் மனிதர்களின் சிக்கல்கள் தீர,

விநாயகப் பெருமானுக்குரிய இந்த சங்கடஹர சதுர்த்தியைத் தான் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்

என்று சான்றோர்கள் எடுத்துரைப்பார்கள்.

போராட்டங்களை சந்தித்தவர்களெல்லாம் இந்த விரத்தினால் பலன் பெற்றிருப்பதால் முறையாக நாமும்

சங்டஹர சதுர்த்தி விரதத்தை முறைப்படி மேற்கொண்டு மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும்

இல்லாமல் வாழலாம் அல்லவா?

சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்போம்.

சந்தோஷத்தோடு வாழ்வில் வளம் சேர்ப்போம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com