

ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்து செய்பவர் கோடிமக்களில் மிகசிலரே.
எட்டு வாக்தேவிகள் அம்பாளின் பெருமைதோன்றிய வரலாறு அம்பாள் ஸ்வரூபம் மந்திர பரிவார தேவதைகள்
வழிபாட்டு முறைகள் மந்திரம் தந்திரம் இவற்றை கூறுவதால் உண்டாகும் நன்மை என அனைத்தையும்
கூறுவதால் இது வேதத்திற்கு சமமானது.
இதை கூறுபவர் யாராக இருந்தாலும் அவர்களிடம் உள்ள தீய சக்தி விலகிவிடும்.
கங்கையில் நீராடல் கோடி லிங்கங்ககளை பிரதிஸ்டை செய்தல் அஸ்வமேத யாகம் செய்தல்
அன்னதானம் செய்தல் போன்ற இவை யாவையும் விட மேன்மையானது என்கிறார்கள்.