அன்னை துர்க்கா பூஜையின் மகிமைகள்

இளம் பெண்கள் துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.வாலிபர்கள் துர்க்கையைப் பூஜித்து வந்தால் அழகும் அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்
அன்னை துர்க்கா பூஜையின் மகிமைகள்
Published on

ராகு கிரகத்தின் அதிபதியான துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபடவேண்டும்.

குறிப்பாக திருமணம் நடைபெறாமல் கால தாமதமாகி வரும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் 13 வாரங்கள் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக அந்தக்கன்னிக்கு மனம்போல் மணமகன் வாய்த்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

பிள்ளைபேறு இல்லாமல் மன அமைதியற்ற ஆண்களும் அன்னை துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் பூஜித்து வந்தால் அன்னையின் அருட்காடசத்தினால் அவரது மனைவி கருத்தரிப்பாள்.

இதனால் பிள்ளை பேறு உண்டாகி சந்தோஷமடைவாள்.

பெண்கள்&துர்க்கை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும். குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும். ஆண்கள்&துர்க்கையை வழிப்பட்டு வந்தால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

வியாபாரம் விருத்தியாகும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் செல்வ வளம் பெருகும். இளம் பெண்கள்&துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.

நல்ல கணவன் அமைவான். வாலிபர்கள் துர்க்கையைப் பூஜித்து வந்தால் அழகும் அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

அதனால் குடும்பம் செல்வக் களஞ்சியமாகும். பிறக்கும் குழந்தைகளும் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்க்கையில் மேலும் மேலும் சந்தோஷம் உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com