விநாயகர் சுக்ரவார விரதம்

விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் இந்த விரதம் இருத்தல் வேண்டும்.
விநாயகர் சுக்ரவார விரதம்
Published on

நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதிலும் விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.

முதன் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் வைகாசி மாதம் தொடங்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை கடைபிடித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் இந்த விரதம் இருத்தல் வேண்டும்.

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : பகலில் விரதம் இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம். அல்லது அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தால் விரதமிருந்து விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடலாம். அல்லது நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

பலன் : கல்வி அபிவிருத்தி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com