ஆதி திருவரங்கத்தில் பரமபத வாசல் திறப்பு

பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் அரங்கநாதரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். முன்னதாக, அதிகாலை அரங்கநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
ஆதி திருவரங்கத்தில் பரமபத வாசல் திறப்பு
Published on

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பரமபதவாசல் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் அரங்கநாதரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

முன்னதாக, அதிகாலை அரங்கநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

5 மணிக்கு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர், பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.

அப்போது, அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா - கோவிந்தா என கோஷம் எழுப்பி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

தொடர்ந்து, மைய மண்டபத்தில் மூன்று முறை வலம் வந்த அரங்கநாதர், பின்னர் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

X

Maalai Malar
www.maalaimalar.com