

எடை குறைய வேண்டும். இதை சொல்லாத மனிதர்கள் மிகக் குறைவு எனலாம். ஆனால் இதற்கான அன்றாட வழிமுறைகளில் எளிய சிலவற்றினை நடைமுறையில் கொண்டு வர தவறி விடுகின்றோம்.
* குளிர் பானம், சர்க்கரை சேர்த்த டீ, கிரீன் கலந்த அல்லது முழு கொழுப்பு நிறைந்த காப்பி போன்றவை பழக்கத்தில் நன்கு உள்ளது.
* நல்ல புரதம், முட்டை, பனீர், தயிர், சிக்கன் இவை கொழுப்பை நன்கு குறைக்க வல்லவை.
* சாப்பிட்ட பிறகு 15 நிமிடம் நிதானமாக நடக்கின்றோமா?
* முறையான டயட்டில் இருக்கின்றோேமா?
* நொறுக்குத்தீனி இன்றி இருக்கின்றோமா?
* 7 அல்லது 8 மணி நேரம் நன்கு உறங்குகின்றோமா?
* துரித உணவுகளை தவிர்க்கின்றோேமா?
* அவ்வப்போதாவது உண்ணாவிரதம் இருக்கின்றோமா?
* அதிக ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் கார்டிசால் அளவினை அதிகப்படுத்தி வயிற்றை சுற்றிய கொழுப்பினை அதிகரிக்கச் செய்யும்.
* உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை பெற்று சிறிதளவேனும் எடை தூக்குகின்றோமா?
* நன்குமென்று நிதானமாய் உண்கின்றோமா?
* குறுக்கு வழிகள் என தவறான முறைகளை கடைப்பிடிக்காது இருக்கின்றோமா?
உங்கள் மருத்துவர் அனுமதித்தால் எலுமிச்சை சாறு + வெந்நீர் கலந்து அருந்தலாம்.
* சர்க்கரை இனி அறவே மருத்துவ ஆலோசனைப்படி தவிர்க்கலாம்.
* வெள்ளரி சாலட், பச்சை காய்கறிகள் என கலோரி சத்து நிறைந்த நார்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
* தயிர், மோர் நல்ல செரிமானம் தரும்.
* வறுத்து, பொரித்த உணவுகளை தவிர்க்கலாம்.
* மருத்துவ ஆலோசனை பெற்று 10 ஆயிரம் அடிகள் நடக்கலாம்.
எளிய இரவு உணவு உதவும்.
இவை அனைத்தையும் 2 முதல் 3 மாதங்கள் ஆவது தொடர்ந்து செய்தால் பலன் கிட்டும்.
* இந்த திட்டங்கள் வெற்றி பெறும் வரை எவரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
* சில நேரம் நமக்கு செயலாற்ற முடியாமல் போகலாம். அது ஒரு பலவீனமாக கூட இருக்கலாம். ஆனால் அதனைப் பிறர் அறிய வேண்டிய அவசியம் இல்லையே.
* நம் தோல்விகளை பிறர் அறிய வேண்டிய அவசியமும் இல்லை. நம் ரகசியங்களை பிறர் அறிய வேண்டிய அவசியமும் இல்லை. நம் திட்டங்களை நாமே அமைதியாய் நகர்த்துவோம். சாதிப்போம்!
நெஞ்சுவலி, திடீரென பொறுக்க முடியாத தலைவலி, பல் வலி, மூட்டு வலி, முதுகு வலி, காது வலி, கால் வலி, வயிற்று பிடிப்பு, பாத எரிச்சல், நெஞ்செரிச்சல் இவைகளை அலட்சியம் செய்யாது கவனிக்க வேண்டும்.
* அதே நேரம் நம் மன வலிகளை எல்லோரிடமும் டமாரம் அடிக்க வேண்டாம்.
* யாரும் நமக்காக அக்கறை காட்டுவதில்லை. பிறரை நம்பி சாய வேண்டாம்.
* நம் காலிலேயே நிற்போம்.
* ரொம்ப நல்லவனாக இருந்தால் தலையிலே மிளகாய் அரைப்பார்கள்.
* பிறர் நம்மை தவறாக புரிந்து கொண்டால் அதற்கு பெரிய விளக்கம் வேண்டாம்.
* நம் உடல், நம் மனம் பாதுகாக்கப்பட வேண்டும்.
* நாள் ஒன்றுக்கு 1 சதவீதம் எதிலாவது நம்மை முன்னேற்றி கொள்வோம்.
மேற்கூறியவை மனநலத்தினை கூட்டி உடலை கச்சிதமாக வைக்கும்.
உடல் ஆரோக்கியம், எடை கூடாது இருத்தல் ஆகியவை கீழ்க்கண்டவற்றிலும் வரும்.
* ஒருவரின் உறவுக்காக மற்ற நல்ல உறவை மறக்கக்கூடாது.
* சற்று பொறுமையாய் பொறுத்து நல்லதையே பெற வேண்டும்.
* அமைதியில் உலகத்தினை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* ஒன்று வாழ்வதில் பிசியாகலாம் அல்லது இறப்பதில் பிசியாகலாம்.
இதெல்லாம் உங்கள் உணவில் இருக்கிறதா?
* புரதம் 50 முதல் 70 கிராம் 20 முதல் 25 சதவீதம் உங்கள் அன்றாட கலோரி சத்து சிக்கன், மீன், முட்டை, டோப்பு, பருப்பு, பீன்ஸ், தயிர்.
* மாவு சத்து 225 முதல் 325 கிராம் 45 முதல் 65 சதவீதம் அன்றாட கலோரி சத்து பிரவுன் அரிசி, ஓட்ஸ், சர்க்கரை வள்ளி, முழு தானியங்கள் பழங்கள்.
* ஆரோக்கியமான கொழுப்பு 60 முதல் 80 கிராம் 20 முதல் 35 சதவீதம் அன்றாட உணவு அவகோடா, கொட்டை, விதை, ஆலிவ் எண்ணை, மீன்.
* நார்ச்சத்து 25 முதல் 35 கிராம்- காய்கறிகள், பழங்கள், முழு தானியம், பயிறு, விதை.
* விட்டமின் ஏ: 700 முதல் 900 மில்லி கிராம்- கேரட், சர்க்கரைவள்ளி, பசலை, முட்டை.
* விட்டமின் சி: 75 முதல் 90 மில்லி கிராம் ஆரஞ்சு, பொரி, கிவி, கொடைமிளகாய், பிரக்கோலி.
விட்டமின் டி: 15 முதல் 20 மில்லி கிராம் மீன் முட்டை மஞ்சள் கரு சத்து மாத்திரை சூரிய ஒளி.
விட்டமின் டி: 15 மில்லி கிராம் கொட்டை வகைகள், விதைகள், பசலைக்கீரை, ஆலிவ் எண்ணை, அவகோடா.
வைட்டமின் கே: 90 முதல் 120 மில்லி கிராம் பச்சை கீரை வகைகள்.
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்: முழு தானியங்கள், முட்டை, அசைவ உணவு, கொட்டை வகைகள்.
கல்சியம் 1000 முதல் 1200 மில்லி கிராம்- பால், பால் சார்ந்த உணவுகள், பாதாம் பால், டோபு, பிரோகோலி.
இரும்பு சத்து: 8 முதல் 10 மில்லி கிராம் சிவப்பு அசைவம், பசலைக்கீரை, பூசணி விதை, கனவா.
* மக்னீசியம்: கொட்டைகள், விதைகள், முழு தானியங்கள், பசலைக்கீரை வகைகள், பருப்பு, பயிறு வகைகள்.
* பொட்டாசியம் 3,500 முதல் 4,500 மில்லி கிராம்- வாழைப்பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு, பசலை கீரை, பீன்ஸ்
* ஜிங்க்- 8 முதல் 11 மில்லி கிராம் அசைவம், மீன், மூக்கடலை, கொட்டைகள், விதைகள், பால், பால் சார்ந்த உணவுகள்.
* ஒமேகா-3 250 முதல் 300 மில்லி கிராம்- மீன், சியா விதை, வால்நட், பிளக்ஸ் விதைகள்.
* நோய் எதிர்ப்பு: கிரீன் டீ, கொட்டைகள், பல நிற பழங்கள், காய்கறிகள், அடர்ந்த சாக்லேட்.
* தண்ணீர் 2½ முதல் 3 லிட்டர் உடல் இயக்கம் ஜீரண சக்தி இவை அனைத்தும் பிடிப்பிடியாக வேண்டும் என்றில்லை அன்றாடம் சிறிதளவு சேர்த்தாலும் போதும்.
* எல்லார்கிட்டயும் உங்க வாழ்க்கையை பற்றி பகிராமல் இருந்தாலே பிறர் நம் வாழ்வில் மூக்கை நுழைக்காமல் இருப்பார்கள்.
* பிறரது கருத்துக்கள் உங்கள் வாழ்வை எதற்கு பாதிக்க வேண்டும்?
* ஆரவாரம் இல்லாத அமைதி தான் இனிய வாழ்க்கை அமைதியானவரை யாரும் மனதால் காயப்படுத்த முடியாது.
* எல்லோரும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் அதே நேரம் பகைமையும் தேவையில்லை.
மற்றும் சில உணவுப் பழக்கங்களும் நமக்கு கை கொடுக்கும்.
ஸ்ட்ரெஸ்- என அடிக்கடி கூறுகின்றீர்கள். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கிரீன் டீ குடிக்கலாம்.
தலைவலி- சாதாரண தலைவலி என்றால் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு பார்க்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சினைகள்- தோலுடன் ஒரு ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம்.
* தொண்டை கட்டு கரகரப்பு மாற்று மருத்துவத்தில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து அடிக்கடி கொடுக்கின்றனர். மேலை நாடுகளில் இது சர்வசாதாரணமாக பழக்கத்தில் உள்ளது.
* பல் வலிக்கு கிராம்பு, கிராம்பு தைலம் அதிக சிபாரிசு செய்யப்படுகின்றது.
சக்தி குறைவதாக தெரிகின்றதா? ஆரஞ்சு ஜூஸ் குடித்து பாருங்கள்.
* சர்க்கரை அளவு குறைவாக இருக்கின்றதா? சில துண்டுகள் பேரிச்சம் பழம் எடுத்துக் கொள்ளலாம்.
* வயிறு உப்பிசமா? கொழுப்பில்லாத தயிர், மோர் உதவுமே.
* நீர் சத்து குறைகின்றதா? வெள்ளரி எடுத்துக் கொள்ளுங்கள்.
சருமத்திற்கு- அன்றாடம் ஒரு கேரட் எடுத்துக் கொள்ளலாம்.
உள் வீக்கம், வெளி வீக்கம் இதற்கு அன்னாசி பழம் ஒரு சிறந்த மருந்து.
ஆக இந்த சின்ன சின்ன குறிப்புகள் மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டு வரும். முயற்சி செய்து பார்ப்போமே?
மேலும் கொட்டை வகைகளில் 4-5 வால்நட் இதனை வயதிற்கு ஏற்ப அன்றாடம் எடுத்துக் கொள்ளலாமே. இதில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம் என சத்துக்கள் கொட்டி கிடக்கின்றன. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் புற்றுநோய், இருதய பாதிப்பு என பல பாதிப்புகளுக்கு எதிர்ப்பாக அமைகின்றது. மூளை போல் பார்ப்பதற்கு இருக்கும். இந்த கொட்டை மூளை செயல்பாடுகளுக்கு நன்கு உதவுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.
எல்லா கொட்டை வகைகளை விட வால்நட் தரத்தில் உயர்ந்ததாக காணப்படுகின்றது. காரணம் இதில் உள்ள கொழுப்பு, வைட்டமின்கள், பொட்டாசியம், இரும்பு, ஜிங்க், மெக்னீசியம் தாதுக்கள், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகியவை இந்த தரத்தினை தருகின்றன. இதில் உள்ள வைட்டமின் கே, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனிசு, ஒமேகா 3, புரதம் ஆகியவை வீக்கத்தினை குறைத்து, கெட்ட கொழுப்பினை கட்டுப்படுத்து கின்றன. செல் பாதிப்பு தடுக்கப்படுகின்றது.
* நீரிழிவு நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம்.
* வீக்கம் குறையும் குடல் ஆரோக்கியம் கூடும். சில வகை புற்றுநோய் பாதிப்புகள் குறையும்.
உயர் ரத்த அழுத்தம் குறையும்.
கர்ப்ப காலத்தில் நல்லது, மூளை பலம் கூடும். ஆக இதனை எல்லாம் செய்யலாமே!