ஆயுளை கூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘ஆயுர் வேதம்’

உலகளவில் மிகவும் பரவலாக நடைமுறையில் இருப்பது ஆயுர்வேத முறையாகும்.
Ayurveda
Published on

இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. நாகரீகம், அவசரம் இவைகள் நடுவே அன்றாட வாழ்க்கை முறையை ஒட்டி வருவது நம் மருத்துவம் என்பதனை அனைவரும் அறிவர். இன்றும் ஜலதோசத்திற்கு அம்மா கசாயம்தான் என்பவர் நம்மில் ஏராளம்.

பாரம்பரிய மருத்துவ முறை

மனித வாழ்வின் அடிப்படை ஆதாரங்களில் முக்கியமானது ஆரோக்கியம். உடல், மனம் மற்றும் ஆன்மா சமநலையில் இயங்கும் போதுதான் முழுமையான நல்வாழ்வு சாத்தியமாகின்றது. இந்த உண்மையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட நோய் வராமல் தடுப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்ட மருத்துவ முறைகளை உண்டாக்கினர். அவையே இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள்.

ஆரோக்கியம்

இந்தியாவில் தோன்றிய சித்த, ஆயுர்வேத, யுனானி போன்ற மருத்துவ முறைகள் மனிதனை ஒரு உடலாக மட்டுமல்லாமல் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமாகக் கருதி சிகிச்சை அளிக்கின்றன. இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, உணவு கட்டுப்பாடு, ஒழுக்கமான வாழ்க்கை மூலம் ஆரோக்கியத்தை காத்தனர். பல முனிவர்கள், சித்தர்கள் மற்றும் மருத்துவ அறிஞர்கள் தங்கள் அனுபவங்களையும், ஆய்வுகளையும் நூல்களாக பதிவு செய்துள்ளனர். அகத்தியர், போகர், திருமூலர், தேரையர், யூகி முனிவர் என 18 சித்தர்களின் பாரம்பரிய நூல்கள் உள்ளன. இன்று உலகளவில் மிகவும் பரவலாக நடைமுறையில் இருப்பது ஆயுர்வேத முறையாகும். ஆயுள் என்பது வாழ்வு வேதம் என்பது அறிவியல். பஞ்ச பூதங்களை அடிப்படை தத்துவத்தில் கொண்டது.

வாதம்

காற்று மற்றும் ஆகாய பண்புகள், உடல் இயக்கம், நரம்பு மண்டலம், சுவாசம், ரத்த ஓட்டம் ஆகிய செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துகின்றன.

பித்தம்

நெருப்பின் பண்பு கொண்டது. செரிமானம், உடல் வெப்பநிலை, வளர் சிதை மாற்றம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.

கபம்

நிலம் மற்றும் நீரின் பண்புகளைக் கொண்டது. உடலின் விமை, உறுதி, ஈரப்பதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இவற்றிற்கு காணமாகின்றது.

ஆயுர்வேத சிகிச்சை முறையாக மூலிகை மருந்துகள், உணவு கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள், யோகா, தியானம், மசாஜ், எண்ணை சிகிச்சை, பஞ்ச கர்மா ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. பஞ்ச கர்மா என்பது உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் சிகிச்சை முறையாகின்றது.

கமலி ஸ்ரீபால்

ஆயுர் வேதம்

நாம் பல பிரபல ஆயுர்வேத மருத்துவமனைகளை பார்த்துள்ளோம். கேட்டுள்ளோம். சிகிச்சை கூட பெற்றுள்ளோம். பலர் வெளிநாட்டில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். அவ்வகையில் பல காலமாக பலரும் அறிந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆஸ்ரமம், மருத்துவமனை பற்றி இங்கு நான் அறிந்தனவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மக்கள் அறிய வேண்டும், பயன் பெற வேண்டும் என்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி

புகழ் பெற்ற ஆன்மீகத் தலைவராக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அறியப்படுகின்றார். ‘தி ஆர்ட் ஆப் லிவிங்” வாழ்வியல் கலை என்பதனை 1981-ம் ஆண்டு தொடங்கினார். கர்நாடக மாநிலம், பெங்களூரினை தலைமையகமாக கொண்டது. சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தியான மண்டபங்கள், அமைதியான சூழல், யோகா அரங்குகள், வேத பாடசாலை, கோ சாலை, பசுமையான தோட்டம், தங்கும் வசதி என உள்ளன. தியானம், யோகா என பல பயிற்சி வகுப்புகள் இருந்தாலும் இவர்களின் ‘சுதர்சன கிரியா யோகா’ மக்களுக்கு பெரும் அளவில் உதவுகின்றன என்பதே இங்கு சிறப்பு அம்சமாக நான் குறிப்பிட விரும்புகின்றேன். தனி மனித ஒழுக்கம் உலக அமைதிக்கு பெரிதும் உதவும் முறையாக இவரது வகுப்புகள் உள்ளன.

இவர்களது மருத்துவமனையில் நவீன பரிசோதனை ஆய்வகங்களும் உள்ளன. ஆயுர்வேத மருத்துவ கல்லூரியும் உள்ளது. இவர்களின் மிக சிறந்த அம்சமாக நான் வியந்தது.

* மிக தன்மையான, பொறுமையான பேச்சு

* மருத்துவர்களின் திறமை

* மிகச் சிறந்த யோகா, தியான பயிற்சி முறைகள்.

* பளிங்கு போன்ற சுகாதாரம், சுத்தம்

* அனைவருக்கும் கிடைக்கும் பாரபட்சமற்ற சிகிச்சை

* சிகிச்சையின் பலன்கள்

* நேரம் தவறாமை

* நியாயமான சிகிச்சை செலவு

* சாத்வீக உணவு

* ஆராய்ச்சிகள் இப்படி பல உள்ளன.

தனி ஒருவரால் இப்படிப்பட்ட உலக சாதனை பின்னர் தன்னையே அமைதியாய் வெளியில் காட்டாத திறன் இவையெல்லாம் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்தான்.

மருத்துவமனை

பல இடங்களில் பரவியுள்ள இவர்களது மருத்துவமனை சென்னையிலும் வந்துள்ளது நமது பாக்கியமே. குறிப்பாக கண் பார்வை கோளாறு சிகிச்சைகளும் சிறப்பு அம்சங்களாக திகழ்கின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதிலும் கவனிக்கப்படுவது பாராட்டுக்குரியது. ஹிதரியம் என்ற கண் சிகிச்சைக்கு என்று கேரள புகழ் மருத்துவமனை சென்னையில் உள்ளது. இப்படி பலரும் தங்களால் ஆன சிகிச்சை முறைகளை மக்களுக்கு அளித்து சேவை செய்கின்றனர். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி மருத்துவமனையில் பணியாற்றும் அனைவரும் யோகா, தியான முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். இதுவே இவர்களின் கூடுதல் பலம்.

தொலைபேசி

இங்கு தியானத்தில் உயர்நிலை அடைந்தவர்களில் பலர் ஸ்கேனர்ஸ் என்று உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு பேசும்பொழுது பேசுபவரின் பிரச்சினைகளை அவர்களால் கூற முடிகின்றது. தீர்வும் கூறுகின்றனர். உங்களால் முடிந்த சிறிய தொகையினை காணிக்கையாக ஆசிரமத்திற்கு அளிக்கலாம். எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் அவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்யாமல் முக்கியமான பிரச்சினைகளுக்கு தொலைபேசி மூலம் அணுகலாம். ஆனால் நாம் பணிவுடனும் மரியாதையாகவும் இருப்பது நமது பண்பாகும்.

தியானம்

இந்தப் பகுதியினை நான் எழுதும் போது பலரும் யோகா தியானம் சிகிச்சை இவற்றிற்கு முக்கியத்துவம் தராமல் இது ஜோதிடமோ என்று ஓடுவார்கள் என்ற அச்சமும் என்னுள் எழுகின்றது. இது ஜோதிடம் அல்ல. இதுவும் ஒரு ஆன்மீக முறைதான், மூட்டை கேள்விகளுடன் உங்கள் வாழ்வினையை தலைகீழாய் மாற்றி விட வேண்டும் என்ற பேராசை வேண்டாம். நீங்கள் எல்லாம் அறிய வேண்டும் என்பதற்காக இதையும் எழுதினேன். அவ்வளவே. முடிந்தால் சுதர்சன கிரியா யோகா பயிற்சி பெறுங்கள். வாழ்வின் நிலை மாறும். உங்களை நீங்கள் ஆக்கபூர்வமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* என் வழியில் வரும் எதனையும் கையாளும் திறமை எனக்கு உள்ளது.

* எந்த முடிவினையும் எடுக்க என்னையே நான் நம்புகிறேன்.

* நான் இத்தனை காலம் கடந்து வந்ததை பெருமையாக கருதுகிறேன்.

* நான் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முழு ஊக்கத்துடன் செய்கிறேன்.

* நான் நல்லவைகள் மீதே கவனம் செலுத்துகின்றேன்.

* என் வாழ்க்கை என்னால் நல்ல முறையில் மாற்றிக் கொள்ள முடியும்.

* நான் வெற்றியை நோக்கி செல்கின்றேன்.

* நான் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பேன்.

* நான் சக்தி மிகுந்தவன்.

* எல்லோரும் நான் நினைப்பது போல் நினைக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன்.

* மரியாதை இல்லாத இடத்தில் உடனடியாக நகர்ந்து விடுவேன்.

* பல பிரச்சினைகள் தானே சுருங்கிவிடும்.

* அதிக விளக்கம் அளிப்பது நிம்மதியை கெடுக்கும்.

* என் வருங்காலம் நான் அன்றாடம் செய்யும் செயல்களில் இருக்கின்றது.

* அதிக சொகுசு முதல் எதிரி.

* அமைதி உண்மையை சத்தமாக சொல்லும்.

* என் எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்த முடியும்.

* என் திறமை எனக்கு வெற்றி தரும்.

* சுதர்சன கிரியா யோகா செய்யுங்கள், நீங்களே மாறிவிடுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com