நாளை கடைசி புரட்டாசி சனி: விரதம் இருந்து தளியல் போடுங்கள்...

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு “தளியல்” போடுவது வழக்கம். பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
நாளை கடைசி புரட்டாசி சனி: விரதம் இருந்து தளியல் போடுங்கள்...
Published on

நாளை புரட்டாசி 4-வது சனிக்கிழமை. அனைவரும் பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1-வது,5-வது சனிக்கிழமையில் போடுவாங்க. ஆனால் இந்த வருடம் 4 புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் மட்டுமே வருகிறது. அதனால் கடைசி சனிக்கிழமையான நாளை விரதம் இருந்து பெருமாளுக்கு தளியல் போடுவது சிறப்பானதாகும். பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம்.

ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.

கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com