பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: துடுப்புப் படகு போட்டியில் 4 ஆம் இடம் பிடித்த இந்தியா.. அடுத்தது என்ன?

இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் ஆவர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: துடுப்புப் படகு போட்டியில் 4 ஆம் இடம் பிடித்த இந்தியா.. அடுத்தது என்ன?
Published on

ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. நேற்று இரவு வீரர்களின் அணிவகுப்பு , கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை என கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் தற்போது போட்டிகளில் வீரர்களும் ரசிகர்களும் மும்முரமாகியுள்ளனர்.

மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் முதலாவது நாளான இன்று நடைபெற்ற துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4 ஆவது இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் தாமஸ் மகின்டோஸ் [Thomas Mackintosh] 3 வது இடமும், கிரீஸ் நாடு வீரர் ஸ்டெபானோஸ் டோஸ்க்கோ [Stefanos Ntousko] 2 வது இடமும், எகிப்து வீரர் அப்தேல்காலெக் எல்பனா[Abdelkhalek Elbanna] முதல் இடமும் பிடித்துள்ளனர்.

4 வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இழந்துள்ள நிலையில் தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக நாளை நடக்கும் ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் ஆவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com