சிங்கத்தை கதற கதற தூக்கிச் சென்ற பெண்- வைரலாகும் வீடியோ

குவைத்தில் சிங்கம், புலி போன்ற மிருகங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கத்தை தூங்கிச் செல்லும் பெண்
சிங்கத்தை தூங்கிச் செல்லும் பெண்
Published on

குவைத் நகரம்:

குவைத் நாட்டில், பெண்மணி ஒருவர், சிங்கத்தை கையில் தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிங்கம் கதறியபடியே பெண்மணியுடன் செல்கிறது. 

அந்த பெண் தான் சிங்கத்தின் உரிமையாளர் என்றும், வீட்டில் இருந்து தப்பி சென்று தெருவில் சுற்றித்திரிந்த சிங்கத்தை பிடித்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விலங்குகள் நல வாரியம் கூறுகையில், குவைத் நாட்டில் சிங்கம், புலி போன்ற மிருகங்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பணக்காரர்கள் இதுபோன்ற மிருகங்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். அதிகார மட்டத்தில் தெரிந்த நபர்கள் இருப்பதால் சட்டத்தில் இருந்து தப்பி விடுகின்றனர் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com