"ஆக்கபூர்வமான 2 நாட்கள்": இந்தியாவை பாராட்டும் அமெரிக்கா

டெல்லி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்இந்தியாவிற்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் கடமைப்பட்டிருப்பதாக கிர்பி தெரிவித்தார்
"ஆக்கபூர்வமான 2 நாட்கள்": இந்தியாவை பாராட்டும் அமெரிக்கா
Published on

ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இம்மாதம் 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட பல உறுப்பினர் நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் ராஜாங்க பேச்சுவார்த்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபைக்கான 78-வது அமர்வில் உரையாற்றினார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு உலகம் பயணிக்க வேண்டிய திசை குறித்து தன்னம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்பட்டு வருகிறார். பெரும் செயல்கள் ஜி20 மாநாட்டில் செய்து முடிக்கப்பட்டன. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தலைமையேற்ற இந்தியாவிற்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். திட்டமிடுதல் மட்டுமல்லாது செயல்படுத்தலிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இந்தியாவில் இருந்த 2 நாட்களும் மிக மிக ஆக்கபூர்வமான நாட்களாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜி20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமரும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com