

அமெரிக்கா - ஈரான் போர் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. ஏப்ரல் 8 தற்காலிக போர் நிறுத்தம் அமலானபோதும் நிரந்தர போர் நிறுத்தத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தி அருகே தங்கள் ராணுவ கண்காணிப்பு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக கூறி அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மீண்டும் முன்னெடுத்தது.
கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல் நடந்து வந்தது. ஈரானும் பதிலுக்கு மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
நேற்று இரவு ஈரான் மீது பாரிய தாக்குதல் ஒன்றை அமெரிக்கா நடத்தும் என கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதை கால்ட் ஆப் செய்து திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரான் அரசுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மாபெரும் அமைதி உடன்படிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதற்கான ஆவணங்கள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன. இன்னும் சில நாட்களில், அநேகமாக இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் வைத்து இந்த ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகும்.
ஒப்பந்தம் கையெழுத்தான உடனே ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்திற்காக உடனடியாக திறக்கப்படும்.
மிக முக்கியமாக, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை தயாரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் எனவே அந்நாடு மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துவதாக தனது ட்ரூத் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே டிரம்ப் உடைய இந்த கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய்க்ஸ், "ஒப்பந்தம் முற்றிலும் தயாராகிவிட்டது போன்ற செய்திகள் யாவும் வெறும் ஊகங்கள் மட்டுமே.
பேச்சுவார்த்தை உரையின் பெரும்பகுதி இறுதி செய்யப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், கடந்த சில நாட்களாக அமெரிக்கா தனது நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றி, வழக்கத்திற்கு மாறான சில சட்டவிரோத நிபந்தனைகளை விதிக்க முயல்கிறது.
ஈரான் தனது சிவப்புக் கோடுகளை எந்தவொரு சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாது. எங்களின் இறுதி முடிவு எடுக்கும் உயர்மட்டக் குழுக்கள் இன்னும் இதற்குப் பச்சைக்கொடி காட்டவில்லை." என தெரிவித்தார்.