தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயம்

போர் விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க போர் விமானம்
அமெரிக்க போர் விமானம்
Published on

வாஷிங்டன்: 


பசிபிக் கடல் பகுதியில் சீன ஆக்ரமிப்பை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. கப்பல் மேல்தளத்தில் உள்ள ஓடுபாதையில்  எஃப்-35 சி ரக போர் விமானம் தரையிறங்க முற்பட்டது. 

அப்போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது.  உடனடியாக மீட்பு படை ஹெலிகாப்டர் மூலம் அந்த விமானத்தில் இருந்த விமானி அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.  அவரது நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 7 மாலுமிகள்  காயமடைந்தனர். வழக்கமான நடவடிக்கையின் போது இந்த விபத்து நேரிட்டதாக அமெரிக்க கடற்படை குறிப்பிட்டுள்ளது. விசாரணை நடைபெறுவதாகவும் காயமடைந்தவர்களில் மூன்றுபேர் சிகிச்சைக்காக மணிலா கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

X

Maalai Malar
www.maalaimalar.com