7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையை திரும்பப் பெற்றது டோங்கா தீவு

டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது.
7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையை திரும்பப் பெற்றது டோங்கா தீவு
Published on

நுகுஅலோபா:

தென்பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20.06 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 174.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கையை டோங்கா தீவு திரும்பப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com