

செயற்கை நுண்ணறிவு சார்ந்த இணையவழித் தாக்குதல்களில் இருந்து நெட்வொர்க்குகளை (வலையமைப்பு) பாதுகாப்பதற்காக, அமெரிக்க முகமைகள் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
நேற்று (செவ்வாய் கிழமை) வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, அதிநவீன செயற்கை நுண்ணறிவு கருவிகளான "முன்னோடி மாதிரிகளை" அவை வெளியிடப்படுவதற்கு முன்பே, அமெரிக்கா தன்னார்வ அடிப்படையில் அணுகுவதற்கு அனுமதி வழங்கும்.
மேலும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மென்பொருள் பாதிப்புகளை ஒருங்கிணைக்கவும், அவற்றுக்கிடையேயான முரண்பாடுகளை தீர்க்கவும் ஒரு "சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மையத்தையும்" இது நிறுவும். செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் சைபர் திறன்களை மதிப்பிடுவதற்கும், இந்த நிர்வாக உத்தரவின் கீழ் அமைப்புகள் தகுதிபெறுமா என்பதை தீர்மானிப்பதற்கும் முகமைகள் இரகசிய அளவுகோல்களையும் உருவாக்கும்.
புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பொதுமக்களிடம் வெளியிடுவதற்கு முன்பு, அவற்றை சோதிப்பதில் அமெரிக்க அரசாங்கம் எந்த அளவிற்குப் பங்கு வகிக்க வேண்டும் என்று அதிகாரிகள் பரிசீலித்ததால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கொள்கை நிர்வாகத்திற்குள் ஒரு விவாதப் பொருளாக இருந்தது. புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு அரசாங்க ஒப்புதலைக் கட்டாயமாக்குவது குறித்த முந்தைய ஆலோசனைகள் இருந்தபோதிலும், இந்த ஆணை டெவலப்பர்களின் தன்னார்வப் பங்கேற்பை வலியுறுத்துகிறது.
நெட்வொர்க் பாதிப்புகளைக் கண்டறிவதில் தனது புரட்சிகரமான மைதாஸ் மாடல் அசாதாரணத் திறன் வாய்ந்தது என்றும், அது ஒரு பெரிய சைபர் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆந்த்ரோபிக் பிபிசி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அமைப்புகளுக்கு அது ஏற்படுத்தக்கூடிய புதிய அச்சுறுத்தல்கள் குறித்த பரவலான உலகளாவிய கவலைக்கு மத்தியில், அந்நிறுவனம் தற்போதைக்கு ஒரு சில பெரிய தொழில்நுட்ப மற்றும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு மட்டுமே மைதாஸ் அணுகலைக் கட்டுப்படுத்தியுள்ளது.