இலங்கையில் ரெயில் மோதி 3 யானைகள் பலி

யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது.ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன.
இலங்கையில் ரெயில் மோதி 3 யானைகள் பலி
Published on

கொழும்பு:

இலங்கையின் மட்டக் களப்பு அருகே ஹபரணை- கல்ஒயா ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை யானைகள் கடக்க முயன்றன. அப்போது பயணிகள் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த யானைகள் மீது ரெயில் மோதியது.

ரெயில் மோதியதில் மூன்று யானைகள் உயிரிழந்தன. யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் யானைகளின் உடல்கள் மற்றும் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணி நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com