கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு- டோங்காவை தாக்கிய சுனாமி

சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சுனாமி அலை
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சுனாமி அலை
Published on

வெலிங்டன்:

பசிபிக் நாடான டோங்காவில் கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தது. இதையடுத்து கடலில் சுனாமி அலைகள் உருவாகின. நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்தன. சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com