அமைதி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்த ரஷியா- நிராகரித்தது உக்ரைன்

உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உக்ரைன் அதிபர்- ரஷிய அதிபர்
உக்ரைன் அதிபர்- ரஷிய அதிபர்
Published on

உக்ரைனில் ரஷிய படைகள் இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அமைச்சரகம் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. இதனால் உக்ரைனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த ரஷியா நேற்று உத்தரவிட்டது.

அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷியா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக, பெலாரஸ் நாட்டில் உள்ள ஹோமலுக்கு ரஷ்ய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷிய கிரம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

ஆனால், ரஷியாவின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மீண்டும் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்றும் மாறாக வார்சா, பிராட்டிஸ்லாவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு ஆகிய இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தினால் சம்மதிப்பதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com