மெக்சிகோவில் துணிகரம் - மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

மெக்சிகோ நாட்டில் பத்திரிகையாளர்களை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டின் டிஜூவானாவில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வந்தவர் லூர்து மால்டனோடா லோபஸ் என்ற பத்திரிகையாளர்

இந்நிலையில், நேற்று தனது வாகனத்தில் சென்ற லூர்து மால்டனோடா மீது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

கடந்த ஒரு வார காலத்தில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். சில தினங்களுக்கு முன் மார்க்ரிடோ மார்டினஸ் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டில் மட்டும் 7 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2000 ஆண்டு முதல் தற்போதுவரை 100க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com