சீனா பள்ளியில் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து 10 பேர் பலி

உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது.
சீனா பள்ளியில் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து 10 பேர் பலி
Published on

பெய்ஜிங்:

வட கிழக்கு சீனா குயிக்குகார் என்ற பகுதியில் பள்ளி உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்தனர். இது பற்றி அறிந்ததும் 160-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 10 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 6 பேர் உயிர் இழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com