மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிசூட்டில் குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கும்பல் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த நாட்டில் அதிக வன்முறை சம்பவங்கள் நடைபெறும் மாகாணங்களில் குவானா ஜூவாடோவும் ஒன்று.
துப்பாக்கிசூட்டில் குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
துப்பாக்கிசூட்டில் குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
Published on

சிலாவ்:

மெக்சிகோ நாட்டில் மத்திய பகுதியில் உள்ள குவானா ஜூவாடோ மாகாணம் சிலாவ் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு வயது மற்றும் 16 வயது சிறுமிகளும் அடங்குவர். இதையடுத்து அந்த 2 மர்ம நபர்களும் தப்பிவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கும்பல் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த நாட்டில் அதிக வன்முறை சம்பவங்கள் நடைபெறும் மாகாணங்களில் குவானா ஜூவாடோவும் ஒன்று.

தற்போது நடந்துள்ள துப்பாக்கிசூடு சம்பவம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாக நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோன்ற சம்பவம் கடந்த நவம்பர் மாதம் சிலாவ் நகரில் நடந்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com