தான்சானியாவில் 3 மாதங்களில் 6 பேரை கொன்று தின்ற முதலைகள்

ஆற்றில் உள்ள முதலைகளை வேட்டையாடி அழிக்க வேண்டுமென வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
முதலை
முதலை
Published on

டார் எஸ் சலாம்:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் கிபாஹா மாவட்டம் கிமரமிசலே கிராமத்தில் ருவு என்கிற ஆறு உள்ளது. இந்த ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. ஆற்றில் தண்ணீர் எடுக்க செல்லும் கிராம மக்கள் பலர், முதலைகளுக்கு இரையாகும் சோக நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது.

எனவே, ஆற்றில் உள்ள முதலைகளை வேட்டையாடி அழிக்க வேண்டுமென வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காததால், கிராம மக்கள் முதலைகளுக்கு இரையாகும் சோகம் தொடர்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தொகுதி எம்.பியை சந்தித்து மனு அளித்த கிபாஹா கிராம மக்கள், தண்ணீர் எடுக்க செல்லும் நபர்களை முதலைகள் கொல்வது அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 6 பேரை முதலைகள் கொன்று, தின்றதாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com