பாக்தாத் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
பாக்தாத் விமான நிலையம்
பாக்தாத் விமான நிலையம்
Published on

பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ராக்கெட் தாக்குதல் நடந்தது.

ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்று சேதமடைந்தது என ஈராக் போலீசார் தெரிவித்தனர். 

இதுதொடர்பான விசாரணையில், குறைந்தது 6 ராக்கெட்டுகள் பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்திலும், அதனருகேயுள்ள அமெரிக்க விமான தளத்தின் அருகிலும் தாக்கியது.

ராக்கெட் தாக்குதலில் சேதமடைந்த விமானம் பயன்பாட்டில் இல்லாத ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. தாக்குதல் காரணமாக எந்த உயிர் சேதமோ அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com