துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன் கைது

துப்பாக்கியுடன் வந்த மாணவனை பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் உத்தரவிட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன் கைது
Published on

போர்ட்லாண்ட்:

அமெரிக்காவின் மேனே மாகாணத்தில் மன்றோ என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்தான். இந்த தகவலை அறிந்த போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று வகுப்பாசிரியர் உதவியுடன் மாணவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கியுடன் வந்த மாணவனை பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

அந்த மாணவர் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை. எனவே அவன் என்ன காரணத்துக்காக பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்தான் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com