ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழப்பு

வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், 9 பேர் காயம் அடைந்தனர். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு விபத்து
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு விபத்து
Published on

ஹெராத்:


ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில்பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்ததாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வெடிகுண்டு வேனின் எரிபொருள் தொட்டியில் பொருத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில்,  மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாகாண மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஹெராத் ஆம்புலன்ஸ் தலைவர் இப்ராஹிம் முகமதி கூறினார். 

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை  தாலிபான்கள் அமைப்பு கைப்பற்றியதில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.  ஹெராட்டில் நடந்த முதல் வெடிகுண்டு தாக்குதல் இது என்றும் விசாரணைகள் நடந்து வருவதாக வருவதாகவும் உள்ளூர் தலிபான் அதிகாரி நயீமுல்ஹக் ஹக்கானி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com